டிஎன்பிஎஸ்சி நடத்திய துறை தேர்வுகளுக்கான விடைகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டிஎன்பிஎஸ்சி), 143 துறைத் தேர்வு களை கடந்த 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னை, டெல்லி உள்ளிட்ட 33 தேர்வு மையங்களில் நடத்தியது. இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடை கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc. gov.in) 28-ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருந்தால், பிப்ரவரி 4-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களது நுழைவுச்சீட்டு நகல், பதிவெண் உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மனுக்களை அனுப்பலாம். கடிதம் மூலமாக விண்ணப்பதாரர் மறுப்பு தகவல்களை தெரிவித்தால் ஏற்கப்படாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்