மின்வாரியப் பணிக்கான தேர்வு: ஆன்லைனில் கட்டணம் செலுத்த 18% ஜிஎஸ்டி வரி

By இ.ஜெகநாதன்

தமிழக மின்வாரியத்தில் 1,300 கணக்கீட்டாளர் பணியிடங்கள், 600 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துவது குறித்து மின்வாரியம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு ஜன.10 முதல் பிப்.10 வரையும், உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு ஜன.24 முதல் பிப்.24 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 பணியிடங்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மற்றவர்கள் ரூ.1,000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை வங்கிகள் மூலம் ஆன்லைனில் செலுத்தும்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள சிலர் கூறியதாவது: வங்கிகள் மூலம் ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்தும்போது 18 ஜிஎஸ்டி வரி வசூலிப்பது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

தற்போது மின்வாரியப் பணியிடங்களுக்கான தேர்வுக் கட்டணமான 1,000 ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரியாக ரூ.180-ஐ வங்கிகள் வசூலிக்கின்றன. ஏழ்மை நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களைக் கருத்தில் கொண்டு, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் தேர்வுக் கட்டணத்தை வங்கிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தும்போது ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

39 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்