5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு; தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம்: பெற்றோர் வேதனை

By செய்திப்பிரிவு

குதிரை குப்புறத்தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்த கதையாக இருக்கும் பிரச்சினையில் 5-வது 8-வது படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அறிவித்து அதில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கட்டணமும் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளதற்கு பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

5-வது 8-வது படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அறிவித்து அதில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கட்டணமும் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

“குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளும் 5 மற்றும் 8 -ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் 5,8-ம் நடத்தும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்பட வேண்டும்.

5,8-ம் வகுப்புக்குரிய கேள்வித்தாள்கள் பாதுகாப்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.கட்டுக்காப்பு மையங்கள் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரின் பொறுப்பில், வினாத்தாள் அந்த மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வுக் கட்டணமாக 100 ரூபாயும், எட்டாம் வகுப்பிற்கு தேர்வுக் கட்டணமாக 200 ரூபாயும் நிர்ணயம். இவர்களுக்கான கேள்வித்தாள்கள் அரசுத் தேர்வுத் துறையால் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.

5-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை ஏப்ரல் 28-ம் தேதிக்கு முன்னரும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 25-ம் தேதிக்கு முன்னரும் திருத்தி முடிக்கப்பட வேண்டும்.

மேலும், மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியல் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5-ம் வகுப்பு 8-ம் வகுப்பு தேர்வு நடைமுறை பெற்றோரையும், மாணவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கும்வேளையில் இதுபோன்று தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணமும் நிர்ணயித்திருப்பது குதிரை குப்புறத்தள்ளியதுமல்லாமல் குழியும் பறிப்பதுபோல் உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்