அங்கீகரிக்கப்படாத பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

யுஜிசி பட்டியலில் குறிப்பிட்டுள்ள பட்டங்களை மட்டுமே பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்துப் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''மத்திய, மாநில அரசு சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றச் சட்டப் பிரிவு 3-ன் கீழ் உருவாக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டங்களை வழங்கத் தகுதி பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகும்.

பல்கலைக்கழகங்கள் யுஜிசி சட்டப்பிரிவு 22-ன் படி மட்டுமே பட்டங்களை வழங்க வேண்டும். யுஜிசி சட்டம் 1956, பிரிவு 22 (3)-ன் படி, பல்கலைக்கழக மானியக் குழு இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களின் பட்டியல் உள்ளது. அதில் குறிப்பிட்ட பெயரில் மட்டுமே இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் பட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதை மட்டுமே பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

சில கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள், பட்டியலில் குறிப்பிடப்படாத பட்டங்களை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அத்தகைய பட்டங்களைப் பெறும் மாணவர்கள் வித்தியாசமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

யுஜிசி பட்டியலில் இடம் பெறாத பெயர்களில் பட்டங்களை வழங்க விரும்பும் பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிறுவனங்கள், அந்தப் படிப்பைத் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக யுஜிசியிடம் உரிய காரணங்களைக் கூறி அனுமதி பெறவேண்டும்''.

இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்