முதுகலை படிப்புக்கு உதவித்தொகை: இளங்கலையில் முதலிடம் பெற்றவர்கள், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

By த.சத்தியசீலன்

முதுகலை படிப்புக்கான உதவித்தொகைக்கு, இளங்கலையில் முதலிடம் பிடித்தவர்கள், ஒரே பெண் குழந்தை, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கு பல்வேறு திட்டங்களின் கீழ், நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. தற்போது முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு, University rank holders, Single girl child, SC ST STUDENTS ஆகிய 3 திட்டங்களின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகின்றது.

1: PG INDIRA GANDHI SCHOLARSHIP FOR SINGLE GIRL CHILD
முதுநிலை முதலாண்டு படிக்கும் மாணவியர்களில் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் இருப்பின் (உடன்பிறந்தவர் யாரும் இருக்கக்கூடாது) அவர்கள் இக்கல்வித்தொகை (மாதம் ரூ.3000) பெற விண்ணப்பிக்கலா.ம்

2: PG SCHOLARSHIP FOR UNIVERSITY RANK HOLDERS(Ist and IInd RANK HOLDERS)
இந்தக் கல்வி உதவித்தொகை(மாதம் ரூ.3000) பெறுவதற்கு, இளநிலை பட்டப் படிப்பில் (UG) முதல் இரண்டு தரநிலையில் மதிப்பெண் பெற்று, (பல்கலைக்கழகம் /தன்னாட்சிக் கல்லூரி/ நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அளவில்) தற்போது முதலாமாண்டு முதுநிலை (I year PG) பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3: PG SCHOLARSHIP SCHEME FOR SC ST STUDENTS FOR PERSUING PROFESSIONAL COURSES
முதுநிலை தொழில்முறைக் கல்வி (professional courses)பயிலும் எஸ்சி எஸ்டி (SC & ST)மாணவர்கள் இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

அந்தந்த கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இதற்காக "நோடல் ஆபீசர்" உள்ளனர். தகுதியுள்ள மாணவர்கள் அவர்களை அணுகி, வரும் ஜன. 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு மாதம் ₹.3,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

ME/ M.Tech. படிக்கும் மாணவர்கள் மாதம் ரூ.7,800, மற்ற மாணவர்கள் மாதம் ரூ.4500 பெற வாய்ப்புண்டு. www.ugc.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி, முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட கல்வி தொகைகளைப் பெற விண்ணப்பிக்க, கால அவகாசத்தை 31/01/ 2020 வரை யுஜிசி நீட்டித்துள்ளது.

எனவே தகுதியுடைய மாணவ-மாணவிகள் மேற்கண்ட கல்வி உதவித் தொகைகளைப் பெற https://scholarships.gov.in/home என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

ஜோதிடம்

30 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்