போகிக்கு என்ன செய்யலாம்?

By செய்திப்பிரிவு

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கை இன்று இல்லை. எல்லாம் செயற்கை மயமாகிவிட்டன. இப்போது இயற்கையைக் காப்பது எப்படி, சுற்றுச்சூழலைக் காப்பது எப்படி என்று உலகம் முழுக்க பேசி வருகின்றனர். சரி... விஷயத்துக்கு வருவோம்.

நாளை போகிப் பண்டிகை. உடனே உங்கள் நினைவுக்கு வருவது பழைய பாய், டயர், டியூப், வீட்டில் தேவைப்படாத குப்பையில் வீசவேண்டிய பழைய பொருட்கள். அதை எரித்து குளிர்காய்வது காலம் காலமாக பொங்கல் பண்டிகையின் போது நடக்கிறது. இப்போது நாம் மனதளவில் மாற வேண்டிய நிலை வந்துவிட்டது. எல்லா உயிர்களும் உயிர்வாழ தேவையான காற்றை தூய்மையாக வைப்போம்.

கடந்த 2018- ம் ஆண்டு ‘கிரீன் பீஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், உலகில் அதிக மாசுபாடு மிகுந்த நகரங்களில் 30 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக தெரிவித்தது. காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் பேர் உலகெங்கும் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகிலேயே அதிக மாசடைந்த 6 நகரங்களில் 5 நகரங்கள் டெல்லியில் இருந்து 80 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளன. குருகிராம், காசியாபாத், பரிதாபாத், பிவாடி மற்றும் நொய்டா ஆகிய அந்த 5 நகரங்கள்தான் அதிக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் உள்ளன.

காற்றின் தரத்தை அளக்கும் ‘ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ்' (AQI) கணக்குப்படி, காற்று மாசு 150 என்ற அளவைத் தாண்டினாலே உடல்நலம் பாதிக்கும். ஆனால், டெல்லியில் 400-ஐ தாண்டி மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்திலும் அந்த நிலை வரவேண்டுமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ‘நாளை போகிப் பண்டிகையின் போது டயர், டியூப்களை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அப்படி மிரட்டினால்தான் நாம் மாற வேண்டுமா? காற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லையா? எனவே, புகையில்லா போகியை நடைமுறைக்குக் கொண்டு வருவோம். மாணவர்கள் நினைத்தால் மாற்றம் வரும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்