மூன்று கட்டங்களாக திறக்கப்படும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்

By ஐஏஎன்எஸ்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஜனவரி 13-ம் தேதியில் இருந்து மூன்று கட்டங்களாகத் திறக்கப்பட உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான வன்முறையை அடுத்து குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

நிலைமை சீரடைந்து வருவதை அடுத்து, படிப்படியாக பல்கலைக்கழகத்தைத் திறக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக டீன்கள், கல்லூரி முதல்வர்கள், பாலிடெக்னிக் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் ஆகியோருடன் துணை வேந்தர் தாரிக் மன்சூர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மூன்று கட்டங்களாகப் பல்கலையைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மருத்துவம், யுனானி, மேலாண்மைப் பிரிவுகளும் ஜாகீர் உசேன் பொறியல் கல்லூரியும் ஜனவரி 13-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இவர்களுக்கான தேர்வுகள் ஜனவரி 16-ல் தொடங்கும்.

இரண்டாவது கட்டமாக சட்டம், வணிகவியல், அறிவியல், வேளாண் அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கான வகுப்புகள் ஜன.20 தொடங்குகின்றன. இவர்களுக்கு ஜன.23-ம் தேதி தேர்வுகள் நடைபெற உள்ளது.

கலைத்துறை, சமூக அறிவியல், சர்வேத ஆய்வுகள் மற்றும் இறையியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட பிரிவுகள் மூன்றாவது கட்டமாக ஜன.27 தொடங்க உள்ளது. அதேபோல மலப்புரம், முர்ஷிதாபாத், கிஷெங்கஞ் ஆகிய பகுதிகளில் உள்ள ஏஎம்யூ மையங்களும் படிப்படியாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

59 mins ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

28 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்