காஷ்மீர் மாணவர்களுக்கு இணையம்: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கல்

By ஏஎன்ஐ

நீட் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்ய காஷ்மீர் மாணவர்களுக்கு நேற்று இணைய சேவை வழங்கப்பட்டது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 5-ம் தேதி இணையம், தொலைபேசி உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இதற்கிடையே மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட்டுக்கு விண்ணப்பிக்க ஜன.6 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் இணைய சேவை நேற்று வழங்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்ய ஏதுவாக இணைய வசதி அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவம் பயில நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இதற்கான விண்ணப்பிக்கும் தேதி டிசம்பர் 2 தொடங்கியது. ஜன.6 வரை விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் மாணவர்களுக்கு நேற்று இணைய வசதி வழங்கப்பட்டது.

இத்தகவலை அவந்திபோரா மாவட்ட காவல்துறை உறுதி செய்தது. முன்னதாக மருத்துவமனைகளில் ஜனவரி 2-ம் தேதி இணைய சேவை வழங்கப்பட்டது. எஸ்எம்எஸ் சேவைகள் கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்