மாணவர்களுக்கு ரூ.2 கோடி உதவித்தொகை: நெகிழ வைத்த வெளிநாடுவாழ் தெலுங்கு மக்கள்

By பிடிஐ

ஆந்திரா, தெலங்கானாவில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2 கோடிக்கு உதவித்தொகை வழங்கி, வெளிநாடுகளில் வசிக்கும் தெலுங்கு மக்கள் நெகிழ வைத்துள்ளனர்.

அமெரிக்க முற்போக்கு தெலுங்கு சங்கத்தினர் (APTA) சார்பில் இந்த உதவித்தொகை சுமார் 1,300 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பவானி கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசும்போது, ''தொழில்முறை பட்டப் படிப்புகளான மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தெலுங்கு என்ஆர்ஐக்கள் சார்பில், ஏபிடிஏ அமைப்பு 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏபிடிஏ அமைப்பு மென்மேலும் உதவிகளை வழங்க வாழ்த்துகள்'' என்றார்.

ஏபிடிஏ நிர்வாகத் தலைவர் நடராஜ் எல்லூரி கூறும்போது, ''அசோசியேஷன் உறுப்பினர்கள் சார்பில் இந்தப் பணம் பெறப்பட்டது. படிப்புக்கு பொருளாதாரம் ஒரு தடையாக மாறிவிடக் கூடாது. பணத் தேவையில் இருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்