ஆடையில் அச்சடித்த பாடம்: அறிவியலை நூதன முறையில் கற்பித்த ஆசிரியை!

By செய்திப்பிரிவு

தனது ஆடையில் புகைப்படங்களை அச்சடித்து அணிந்து வந்து ஸ்பெயின் ஆசிரியை ஒருவர், நூதன முறையில் அறிவியலைக் கற்பித்து வருகிறார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஸ்பெயினைச் சேர்ந்த 43 வயதுப் பெண் வெரோனிகா டூக். ஆசிரியரான இவர் 15 வருடங்களாகப் பாடங்களைக் கற்பித்து வருகிறார். தற்போது 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், ஸ்பானிய மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறார் வெரோனிகா.

இதில் அறிவியல் பாடத்தில் வந்துள்ள உடற்கூறியல் பிரிவு (மனித உடல் உறுப்புகள்) குறித்துக் கற்பிக்க வேண்டிய சூழல் வந்தது. 8 வயது மாணவர்களுக்கு அவை எப்படிப் புரியும் என்று யோசித்தார் வெரோனிகா.

இறுக்கமான ஆடை ஒன்றில் மனித உடற்கூறியல் குறித்த உடல் உறுப்புகள் அனைத்தையும் அச்சிட்டு இணையத்தில் விற்பனை ஆவதைப் பார்த்தார். உடனடியாக அதை வாங்கிய வெரோனிகா, அதையே பள்ளிக்கு அணிந்து வந்தார். உடலின் ஒவ்வொரு உறுப்பையும் எளிமையாக விளக்கிப் பாடம் நடத்தினார்.

இது தொடர்பான புகைப்படங்களை அவரின் கணவர் மைக்கேல் இணையத்தில் பதிவிட்டார். அதில், ''எனது மனைவியை எண்ணிப் பெருமை கொள்கிறேன். மிகவும் உண்மையான வகையில் அவர், மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார்'' என்று தெரிவித்திருந்தார். அவை தற்போது வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

5 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

18 mins ago

உலகம்

20 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

35 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

55 mins ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்