ஜனவரி 16-ம் தேதி மாணவர்களைச் சந்தித்துப் பேசுகிறார் பிரதமர் மோடி

By ஐஏஎன்எஸ்

மாணவர்கள் பொதுத் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில், அவர்களுடன் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார். இதற்கான நிகழ்ச்சி, வரும் ஜனவரி 16 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

'பரிக்ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 3-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இதற்காக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். தேர்வுகள் குறித்தும் அதுசம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம்.

'MyGov' இணையதளம் மூலம் இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தலைப்புகளில் ஏதேனும் ஒன்று குறித்து சுமார் 1500 வார்த்தைகளில் கட்டுரை எழுதவேண்டும். இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், 500 வார்த்தைகளுக்கு மிகாமல், பிரதமரிடம் தங்களின் கேள்வியை முன்வைக்கலாம்.

ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே இதை எழுத முடியும். இதில் உரிய முறையில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் டிஜிட்டல் சான்றிதழ் பரிசாக வழங்கப்படும். பிரதமரிடம் கேள்வி கேட்கத் தேர்வாகும் மாணவரின் படைப்புக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சிறப்புச் சான்றிதழை வழங்கும். மாணவர்கள் இந்தப் போட்டியில் தனியாகவோ, ஆசிரியர்கள் மூலமாகவோ கலந்துகொள்ளலாம். இதில் டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் தங்களின் படைப்புகளை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்

அனைத்து வகைப் பள்ளி மாணவா்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் வகையில் தலைமையாசிரியா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

36 mins ago

வாழ்வியல்

45 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்