'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: இருளில் மூழ்கிக் கிடந்த பள்ளிக்கு வந்த மின்சாரம்

By செ.ஞானபிரகாஷ்

மின்சாரமின்றி இருளில் இயங்கும் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தவிப்பதாக 'இந்து தமிழ் திசை'யில் வந்த செய்தியால் அப்பள்ளிக்கு உடனேயே மின்சார விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. செய்தியைப் பார்த்து நேரடியாக அப்பள்ளியை ஆய்வு செய்த அத்தொகுதி எம்.பி. ரவிக்குமார், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உதவ உள்ளதாகத் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் பட்டம் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் அரசு உதவி பெறும் அருணாச்சலம் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 102 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தப் பள்ளியை நம்பி ஆண்டியார்பாளையம்,நா- பாளையம், ராயஒட்டை, ஒழிந்தியாம்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர்.

இப்பள்ளியில் தற்போது 150 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அரசு நிதி உதவி பெறும் இப்பள்ளிக்கு பல மாதங்களாய் நிதி இல்லாததால் அடிப்படைப் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் மாணவ-மாணவியர் இருளில் படிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுதொடர்பான செய்தி 'இந்து தமிழ் திசை'யில் வெளியானது.

இதையடுத்து இப்பள்ளிக்கு உடனடியாக மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. செய்தியைப் பார்த்த எம்.பி. ரவிக்குமார் நேரடியாகச் சென்று பள்ளியைப் பார்வையிட்டார். குழந்தைகள், அப்பகுதி மக்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பேசினார். குறிப்பாக அங்கு படிக்கும் குழந்தைகள், கல்வி கற்கும் முறைகளைப் பார்த்தார். அப்போது தண்ணீர் வசதி, விளையாட்டு மைதான வசதி உள்ளிட்ட தங்களின் தேவைகளை, அங்குள்ளோர் கோரிக்கையாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து எம்.பி. ரவிக்குமார் கூறுகையில், "தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளிக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர உள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

41 mins ago

ஆன்மிகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்