பிஎச்டி படிப்புக்கு ஜனவரி 4 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பிஎச்டி படிப்புக்கு ஜனவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) டி.தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் முழுநேர மற்றும் பகுதிநேர ஆய்வுப் படிப்புகள் (பிஎச்டி) வழங்கப்படுகின்றன. ஜனவரி பருவ சேர்க்கைக்கு மேலாண்மையியல், கல்வியியல், முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வியியல், பொருளாதாரம், தொடர்கல்வி, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், தமிழ், மின்னணு ஊடகவியல், வரலாறு, புவியியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், குற்றவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) ஜெஆர்எப் தகுதிபெற்ற மாணவர்கள் நிதியுதவியுடன் ஆய்வு மேற்கொள்ளலாம். தகுதியுள்ள முழுநேர மாணவர்களுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் மாதம்தோறும் ரூ.5,000 ஆராய்ச்சி உதவித்தொகை (ரிசர்ச் பெலோஷிப்) வழங்கப்படும். விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 4-ம் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

6 mins ago

தமிழகம்

37 mins ago

சுற்றுலா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்