வரைவு பாடத்திட்டம்: யுஜிசி வெளியீடு

By செய்திப்பிரிவு

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாணவர் திறன் மேம்பாட்டுக் கான பாடத்திட்ட வல்லுநர் குழு வழங்கிய பரிந்துரைகள் அடிப் படையில் வேதியியல், விலங்கி யல், சமஸ்கிருதம், சட்டம், தொல்லியல் மற்றும் சமூகபணி ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வரைவு பாடத்திட்டம் வடிவமைக் கப்பட்டு யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்துறைக்கு தேவையான திறன்களுடன் மாணவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக மாணவர்களின் அறிவு, பணித்திறன் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டு திறன் மேம்பாட்டுடன் கூடிய பாடத்திட்டத்தை வடிவமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பாடப்பிரிவுகளில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்க, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுக்கருத்துக்கள், வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகள் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சம்பந்தபட்ட துறையை சேர்ந்தவர்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி வேதியியல், விலங்கியல், சமஸ்கிருதம், சட்டம், தொல்லியல் மற்றும் சமூகபணி ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வரைவு பாடத்திட்டம் யுஜிசி இணையதளத்தில் உள்ளது. அதுதொடர்பாக கருத்து தெரிவிக்க locfugc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

24 mins ago

ஓடிடி களம்

38 mins ago

க்ரைம்

56 mins ago

ஜோதிடம்

54 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்