பெட்ரோலிய சேமிப்பு குறித்த தேசிய கட்டுரை போட்டியில் தூத்துக்குடி மாணவிகள் சாதனை 

By செய்திப்பிரிவு

பெட்ரோலிய சேமிப்பு குறித்த கட்டுரை போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவியர் இருவர் தேசிய இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

பெட்ரோலிய சேமிப்பு ஆராய்ச்சி சங்கம் சார்பில் 'சுகாதாரம் மற்றும் சிறந்த சுற்றுச்சூழலை நோக்கி எண்ணெய் சேமிப்பு' என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு தேசிய அளவில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

முதல் சுற்று ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. தேசிய அளவில் 7 லட்சம் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இதில் 220 மாணவ, மாணவியரின் கட்டுரைகள் தேசிய இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட 220 மாணவ, மாணவியரில் 23 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பா.மாணிக்க ஐஸ்வர்யா, பி.கன்னிகா ஆகிய இருவரின் கட்டுரைகளும் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவி யருக்கு அந்த அமைப்பு சார்பில் சான்றிதழ் மற்றும் கையடக்க கணினி வழங்கப்பட்டது.

தேசிய அளவில் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட இரு மாணவியரையும் பள்ளி செயலாளர் ஆர்.முரளி கணேசன், இயக்குநர் லெட்சுமி பிரீத்தி, தலைமை ஆசிரியை எம்.எஸ். சாந்தினி கவுசல் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்