தூத்துக்குடிக்கு வந்த கடற்படை போர்க்கப்பல்: பள்ளி மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடிக்கு வந்த கடற்படை போர்க்கப்பலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

ஆண்டுதோறும் டிசம்பர் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் கடற்படை வார விழாவில் இந்திய கடற்படையின் வலிமை, செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போர்க்கப்பல்களை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவியரும் அனுமதிக்கப்படுவர்.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகத்திற்கு p58 சுமேதா எனும் இந்திய கடற்படை போர் கப்பல் வந்தது. இந்த கப்பலை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவியருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் தங்களது ஆசிரியர்களுடன் வந்து இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பலை பார்வையிட்டனர். மேலும் கப்பலில் உள்ள சாதனங்கள், போர்க்கருவிகள், தற்காப்புக் கருவிகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தனர். கடற்படையின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், கப்பலை முதன் முறையாக தற்போது தான் பார்க்கிறோம். போர்க் கப்பலில் இந்திய கடற்படை என்னென்ன சாதனங்களை கையாளுகிறது. தற்காப்புக்காக என்ன செய்கிறார்கள் என்பது குறித்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர்.

இந்த செயல்பாடுகளை பார்க்கையில் நாங்களும் பிற்காலத்தில் இந்திய கடற்படையில் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்