குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பழங்குடியின சிறுமி: ஐநா விருது பெற்றார்

By செய்திப்பிரிவு

தனக்கு நடக்க இருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, பெண் கல்வியை ஊக்குவித்து வரும் பழங்குடியினச் சிறுமி, அண்மையில் ஐ.நா. விருது பெற்றுள்ளார்.

18 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களையும் திருமணம் செய்வது குழந்தைத் திருமண சட்டத்துக்கு எதிரானது. இவற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

2011-ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 18 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இதில், முதலிடத்தில் உத்தரப் பிரதேசமும் 2-ம் இடத்தில் பிஹார், 3-ம் இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது.

ஒடிசாவின் கந்தமால் மாவட்டம் பண்டுடி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமி ஜூலிமா மாலிக். அவர் 10-ம் வகுப்பு படிக்கும்போது வறுமை காரணமாக பள்ளிப் படிப்பில் இருந்து நிறுத்தப்பட்டார். அவரின் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். எனினும் அதை மறுத்த ஜூலிமா, தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்தார்.

குழந்தைத் திருமணத்துக்கு எதிராக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதுவரை 12 சிறுமிகளைக் குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். அதேவேளையில் மீண்டும் பள்ளியில் இணைந்த அவர், தனது படிப்பையும் தொடர்கிறார்.

இவருக்கு ஐ.நா. சார்பில், ஐ.நா. தன்னார்வலர் விருது அண்மையில் வழங்கப்பட்டது. சிறுமி ஜூலிமாவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்