பேப்பர் துளை, தென்னை ஓலை மூலம் பஞ்சப்பட்டி அரசுப்பள்ளியில் சூரிய கிரகண விழிப்புணர்வு நிகழ்வு

By செய்திப்பிரிவு

'வானில் ஒரு நெருப்பு வளையம் - வளைய வடிவ சூரிய கிரகணம்' குறித்த அறிவியல் விழிப்புணர்வு செயல் திட்டம் பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்டது.

டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் 11.30 வரை வளைய வடிவ சூரிய கிரகணம் வானில் தோன்றுகிறது. இதுகுறித்து கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியை ஜெய்பீம் ராணி நிகழ்வை துவக்கி வைத்தார். முதுகலை இயற்பியல் ஆசிரியர் பெ.தனபால்,பாதுகாப்பான முறையில் மாணவர்களும், பொதுமக்களும் எவ்வாறு காணலாம் என செயல்விளக்கம் அளித்தார்.

மேலும் பந்து ஆடி, நுண் துளைக் கேமரா, பேப்பர் துளை, இருள் அட்டைப்பெட்டி , தென்னை ஓலை, சூரிய புரொஜெக்டர் பெட்டி, மர நிழல், சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் பாதுகாப்பான முறையில் காண்பதற்கான எளிய கருவிகளை எவ்வாறு வடிவமைப்பது பற்றி விளக்கப்பட்டது. வெறும் கண், சாதாரண கண்ணாடி, x கதிர் படம் மூலம் சூரியனைப் பார்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது

இதில் 882 பள்ளி மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்குபெற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

46 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

57 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்