பள்ளிகளுக்கு 43 நாட்கள் விடுமுறை: ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

By பிடிஐ

பள்ளிகளுக்கு 43 நாட்கள் குளிர்கால விடுமுறை விடப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது.

இதன்படி காஷ்மீரில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் டிசம்பர் 10-ம் தேதி முதல் ஜனவரி 22 வரை விடுமுறை விடப்படுகிறது. ஜம்முவில் உள்ள குளிர் நிறைந்த பகுதிகளுக்கும் இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது.

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை பொருந்தும்.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ஆண்டுதோறும் அதீத குளிர் காரணமாக டிசம்பர் 15 ஆம் தேதி வாக்கில் குளிர்கால விடுமுறை தொடங்கும். லடாக்கின் கார்கில் மாவட்டத்துக்கு குளிர்கால விடுமுறை ஏற்கெனவே டிசம்பர் 2-ம் தேதியில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

குளிர்பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை மிகவும் குறையத் தொடங்கும். இதனால் வருடாவருடம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்