அகில இந்திய கால்பந்து போட்டியில் சென்னை சின்மயா வித்யாலயா சாம்பியன்

By செய்திப்பிரிவு

கோவை சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி சார்பில், நாடு முழுவதும் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான அகிலஇந்திய கால்பந்து போட்டி, கோவையில் நடைபெற்றது. போட்டியில் 34மாணவர் மற்றும் மாணவியர் அணிகளைச் சேர்ந்த 450 பேர் பங்கேற்று விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்:மாணவர்கள் பிரிவுமாணவர்கள் பிரிவில் திருபுனித்ரா சின்மயா வித்யாலயா பள்ளி அணி, காரைக்குடி சின்மயா வித்யாலயா பள்ளி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 3 மற்றும் 4-வது இடங்களுக்கான போட்டியில் கண்ணமாலி சின்மயா வித்யாலயா பள்ளி அணி, கீழ்ப்பாக்கம் சின்மயா வித்யாலயா பள்ளி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

சிறந்த வீரர்களாக காரைக்குடி சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர் சதீஷ்குமார் திருபுனித்ரா சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர் ஜித் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த கோல் கீப்பராக அண்ணாநகர் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர் சுனில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாணவிகள் பிரிவில் சென்னை அண்ணாநகர் சின்மயா வித்யாலயா பள்ளி அணி, கோவை வடவள்ளி சின்மயா வித்யாலயா பள்ளி அணியை 6-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 3 மற்றும் 4-வது இடங்களுக்கான போட்டியில் நாகப்பட்டினம் சின்மயா வித்யாலயா பள்ளி அணி,  சிட்டி சின்மயா வித்யாலயா பள்ளிஅணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் முறையில் வீழ்த்தியது. சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக அண்ணாநகர் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி சுருதி,சிறந்த கோல் கீப்பராக சிட்டி சின்மயா வித்யாலயா பள்ளி மாணவிகிருஷ்ண சிவப்பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சின்மயா வித்யாலயா கல்வி மற்றும் நிர்வாகஇயக்குநர் சாந்தி கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ராஜேஸ்வரி சதீஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்