கருவேலஞ்செடியை வேரோடு பிடுங்கிவந்தால் ரொக்கப் பரிசு: மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆச்சர்ய கிராமம்

By செய்திப்பிரிவு

சீமைக் கருவேலஞ்செடியை வேரோடு பிடுங்கிவந்தால் பரிசு வழங்கி புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராமம் சிறுவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

கொத்தமங்கலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், 'பனைமரக் காதலர்கள்' என்னும் பெயரில் அமைப்பை நிறுவியுள்ளனர். அமைப்பின் சார்பில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பனை விதைகள் நடப்பட்டுள்ளன. கருவேல மரத்தை அழித்து, கிராமத்தில் நிலத்தடி நீரைத் தக்க வைக்கவும் முடிவெடுத்து, அதை செயல்படுத்தி வருகின்றனர்.

இதற்காக புதிய பரிசுத் திட்டத்தையும் இளைஞர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன்படி, சீமைக்கருவேல செடிகளை வேரோடு பிடுங்கி வரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு செடிக்கும் தலா மூன்று ரூபாயை இளைஞர்கள் வழங்கிவிடுகின்றனர். கிராமத்தில் உள்ள தொழிலதிபர்களின் உதவியோடு இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

கருவேலஞ் செடிகளைக் கொண்டு வந்துகொடுப்பதால் கிடைக்கும் பணத்தின் மூலம், படிப்புச் செலவைத் தாங்களே சமாளித்துக் கொள்வதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கிராமங்களில் படிக்கவே சிரமப்படும் சிறுவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதுடன், பசுமையையும் மீட்டெடுக்கும் 'பனைமரக் காதலர்கள்' அமைப்புக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்