2010-ம் ஆண்டுக்கு பின்புதான் உலக வெப்பமயமாதலின் மிக மோசமான 10 ஆண்டுகள்: உலக வானிலை அமைப்பு அறிக்கை

By செய்திப்பிரிவு

உலக வானிலை அமைப்பு ஐ.நா சபைபோன்றே உலகின் பல நாடுகளை, உள்ளடக்கியுள்ளது. இந்த அமைப்பானது, வருடாந்திர பருவநிலை குறித்துநேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது. அதில் வெப்பமயமாதலில் மிகவும் மோசமான 10 ஆண்டுகள் இதுதான் (2010-ம் ஆண்டுக்கு பிறகு) என்று கூறியுள்ளது.

உலக வெப்பமானது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதுதான் உலக வரலாற்றில் மிக அதிக மான வெப்பநிலையாகும். நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது, உள்கட்டமைப்புகளுக்காக அதிகப்படியான கட்டிடங்களை உருவாக்குவது, வாகன பெருக்கம் போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட கரிமவாயுக்களின் உமிழ்வுகளால், உலகின்சராசரி வெப்பநிலையின் அளவு அதிகரித்துள்ளது. இனி வருங்காலங்களில் கார்பன் வாயு உமிழ்வுகள் அதிகமாக இருக்கும்.

கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் உற்பத்தி செய்யும் வெப்பத்தை, 90 சதவீதத்தை பெருங்கடல்கள் உறிஞ்சுக் கொள்கிறது. இதன்காரணமாக, பெருங்கடல்கள் தற்போது அதிக வெப்பநிலையில் உள்ளன.

கரிம வாயுக்களினால் பெருங்கடல்கள், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததை விட, கால் மடங்கு அதிக அமிலத்தன்மையை கொண்டுள்ளது. வெப்பமயமாததால், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 32 ஆயிரத்து 900டன் பனிப்பாறைகள் உருகியுள்ளது. இதனால், வரலாறு காணாத அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது.

வருங்காலச் சந்ததியினர் எதிர்க் கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை பருவநிலை மாற்றம்தான். ஆனால், மக்கள் தொகை பெருக்கம் போன்ற விளைவுகளால், கோடிக்கணக்கான மக்கள் தற்போதே பிரச்சினையில் உள்ளனர். இயற்கை பேரிடர்களால் 2019-ம் ஆண்டில் மட்டும், ஒரு கோடிமக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 2019-ம் ஆண்டு முடிவதற்குள் 2 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக வானிலை அமைப்பின் செயலாளர் பெட்டேரி தலாஸ் கூறுகையில், “தென்கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஐப்பான், கலிபோர்னியா ஆகிய நாடுகளின் காட்டுத்தீ மற்றும்புயல்களின் வழியாக, வெப்பமயமாதலின் விளைவை நாம் இப்போது சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்” என்றார்.

கரிம வாயுக்களின் உமிழ்கள் அதிகமாகி வருவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் 2030-ம் ஆண்டுக்குள் உலக வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் ஐ.நா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்