செய்திகள் சில வரிகளில்: அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளி டிரோன் சந்தையில் இஸ்ரேல் முன்னிலை

By செய்திப்பிரிவு

அமெரிக்கா, சீனாவை விட அதிநவீன டிரோன் உற்பத்தி சந்தையில் இஸ்ரேல் முன்னிலையில் உள்ளது. எதிரி நாடுகளை உளவு பார்க்கவும், போர்களின் போது குண்டுகளை வீசவும் ஆளில்லாத விமானங்கள் (டிரோன்கள்) பயன்படுத்தப்படுகிறது.

ராணுவத்தில் டிரோன்களின் பயன் பாடுகள் அதிகமாக இருப்பதால், டிரோன் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தை தற்போது பெரியதாகிக் கொண்டே செல்கிறது.

எகிப்தை உளவு பார்க்க இஸ்ரேல் தனது முதல் தொலைதூர கட்டுப்பாட்டு டிரோனை 1969-ம் ஆண்டில் கேமராவுடன் பயன்படுத்தியது. தற்போது, சீனா அமெரிக்காவை விட உலகின் மிகப்பெரிய டிரோன் ஏற்றுமதியாளராக இஸ்ரேல் வளர்ந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தொழில்துறையில், அந்நாட்டின் முன்னாள் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சேர்ந்து, அதிநவீன டிரோன்களை உருவாக்குவதால்தான், இந்த முன்னிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தகுதித் தேர்வுகளில் தோல்வியடையும் ம.பி.ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

போபால்

மத்திய பிரதேச பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி நேற்று கூறியதாவது:

தொடர்ந்து 3 ஆண்டுகளாக குறைவான தேர்ச்சி விகி தத்தை அளிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதித் தேர்வும் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இதனால், அவர்களுக்கு 2வது முறையும் பயிற்சி அளிக்கப்பட்டு, மீண்டும் தகுதித் தேர்வெழுத அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதிலும் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும். 2 தேர்விலும் தோல்வியடைந்த ஆசிரியர்கள் 50 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும் அல்லது 20 ஆண்டுகளுக்கு மேல் பணி காலம் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் கட்டாய ஒய்வு அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பிரபுராம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்