தேசிய அறிவியல் மாநாடு: கோவை பள்ளி மாணவர்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசிய அறிவியல் மாநாட்டுக்கு, கணபதி சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கோவையை அடுத்த திருமலையம்பாளையத்தில் உள்ள நேரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கணபதி சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எஸ்.அஸ்வின், எஸ்.வருண்பிரகாஷ் ஆகியோர், 'கழிவில் இருந்து கலை' என்ற தலைப்பில் உருவாக்கிய கண்டு பிடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து மாணவ விஞ்ஞானிகளுக்கான தேர்வில், கோவை மாவட்ட அளவில் இருவரும் தேர்வு செய்யப்பட்டு, மாநில அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டு, கடந்த நவ. 16 மற்றும் 17-ம் தேதிகளில் வேலூர் மஹாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில், இதே படைப்பை சமர்ப்பித்து தேசிய அறிவியல் கண்காட்சிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் டிசம்பர் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேசிய அறிவியல்
மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பள்ளியின் முதல்வர் ஹெச்.காஜா ஷெரீப், வழிகாட்டி ஆசிரியர் ச.சக்திதரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

11 mins ago

தமிழகம்

42 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்