தேசிய கராத்தே போட்டியில் பொய்யாமணி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை: முதலிடம் பிடித்து 6 தங்கப் பதக்கங்கள் குவித்தனர்

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் பொய்யாமணி அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று 6 தங்கப் பதக்கங்களைக் குவித்தனர்.

தேசிய அளவிலான போட்டி

கர்நாடகா மாநிலத் தலைநகரான பெங்களூருவில் தேசிய அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் கராத்தே மற்றும் குங்பூ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், கராத்தே குமிட்டி தனிப்பிரிவில் 7-ம் வகுப்பு மாணவி மனோப்ரியா, 8-ம் வகுப்பு மாணவர் மாதவன் ஆகியோர் தனித்தனி போட்டிகளில் முதலிடம் பெற்று கோப்பைகள் வென்றனர்.

கத்தா எனப்படும் ஆயுதம் பயன்படுத்தும் தனிப்பிரிவில் 5-ம் வகுப்பு மாணவிகள் இளஞ்சிரியப்ரியா, பிரியதர்ஷினி, 6-ம் வகுப்பு மாணவிகள் லிபியா, ஜானகி, 7-ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி மற்றும் மாணவர் தனுஷ் ஆகியோர் முதலிடம் பெற்று 6 பேரும் தனித்தனியே தங்கப் பதக்கம் வென்றனர்.

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கப் பதக்கங்கள், கோப்பைகளை வென்ற மாணவ, மாணவிகள், கராத்தே பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்கு பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆங்கில ஆசிரியர் பூபதி, ஆசிரியைகள் காந்திமதி, சித்ரா, சாந்தி, உமாமகேஸ்வரி, தமிழ்பூங்குயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களுக்கு வாழ்த்து

தேசிய கராத்தே போட்டியில் பங்கு பெற்று 6 தங்கப் பதக்கங்கள் வென்ற பள்ளிக்கும், கரூர் மாவட்டத்துக்கும் பெருமை தேடித்தந்த மாணவ, மாணவிகளுக்கும் அவர்களின் பயிற்சியாளர் கண்ணனுக்கும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், ஆசிரியர்களும் வாழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

ஜோதிடம்

34 mins ago

தமிழகம்

24 mins ago

விளையாட்டு

43 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்