உத்தரகாண்ட்  ரங் பழங்குடியினரின் முதல் இலக்கியத் திருவிழா ஜனவரியில் தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள தர்மா, வியாஸ் மற்றும் சவுந்தாஸ் பள்ளத்தாக்கில் ரங் பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் இந்திய - நேபாள எல்லையில் உள்ள தர்ச்சுலா பழங்குடியின மக்களின் பிரிவினராகும்.

இந்நிலையில், முதல்முறையாக ரங்பழங்குடியின மக்கள் தங்களின் மொழிக்காக ஜனவரி மாதத்தில் இலக்கியத் திருவிழா நடத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இந்திய வானொலியில் நவம்பர் 24-ம் தேதி பேசுகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் ரங் பழங்குடியினரின் பெருமை பற்றியும், அவர்கள் தங்களின் மொழியை பாதுகாத்து வருவதையும் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதனைதொடர்ந்து, பழங்குடியின மக்கள் தங்கள் மொழிக்காக இலக்கிய விழா எடுக்கவுள்ளனர்.

இதுகுறித்து மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலளார் என்.எஸ்.நபல்சியால் கூறுகையில், “தற்போது இந்தியாவில் 20,000 மக்களும், நேபாளத்தில் 1,000 மக்களும் ரங்மொழியை பேசுகின்றனர். நாங்கள் அடுத்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம்ரங் மொழியின் இலக்கியத் திருவிழாவை நடத்த உள்ளோம். பிரதமர் மோடி வானொலியில் பேசும்போது, 2019-ம் ஆண்டில் சர்வதேச பிராந்திய மொழிகள் ஆண்டாக கொண்டாடுவதை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால், ரங் சமூக மக்கள் தங்களின் மொழியை பாதுகாக்க வேண்டும். அதற்காக திருவிழாவை நடத்த வேண்டும் என்று முன்வந்துள்ளனர். இந்த திருவிழாவை 22-84 வயதுக்குட்பட்ட ரங் மக்கள் முன்னெடுக்கிறார்கள்” என்றார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பங்கியால் கூறுகையில், “ரங் மொழியின் அகராதி மிக பெரியது. இதில் பரந்த இலக்கணம், பழமொழிகள், உவமைகள் மற்றும் எண்ணற்ற புதிர்கள் உள்ளன. இதன் பேச்சு வழக்கு அழகாகவும் ஆழமாகவும் இருக்கும். தங்களின் மொழியை பாதுகாப்பது குறித்து பிரதமர் மோடி பேசியது அவர்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

விளையாட்டு

9 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

21 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்