மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக பள்ளிகளில் 3 வேளை 'வாட்டர் பெல்': புதுச்சேரியில் இன்று முதல் அமல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தினமும் 3 வேளை மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக 'வாட்டர் பெல்' அடிக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

மாணவர்கள் பள்ளிகளில் போதிய அளவில் தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தினமும் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக 'வாட்டர் பெல்' திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்ததுள்ளது.

அதேபோல் புதுச்சேரியிலும் மாணவர்கள் தண்ணீர் பருகுவதற்கு ஏதுவாக தினமும் 3 அல்லது 4 வேளை 'வாட்டர் பெல்' அடிக்க வேண்டும். இதை நவ.25-ம் தேதி (இன்று) முதல் அமல்படுத்த வேண்டும் என கடந்த 19-ம் தேதி ஆட்சியர் அருண் உத்தரவிட்டார்.

அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக 3 வேளை 'வாட்டர் பெல்' அடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் இணை இயக்குநர் குப்புசாமி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இந்நிலையில் இன்று முதல் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

க்ரைம்

22 mins ago

வர்த்தக உலகம்

46 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

46 mins ago

விளையாட்டு

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்