பயங்கரவாதிகளின் டிரோன்களை கட்டுப்படுத்தும் நடைமுறைகள்: மத்திய அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

பயங்கரவாதிகளின் டிரோன்களின் அச்சுறுத்தல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) பாதுகாப்புப் படைகளுக்கும் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது என்று மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.

மக்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறியதாவது:சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதியில் சிவில்விமானத் தேவைக்காக ‘சிவில்ரிமோட் பைலட் விமானம் அமைப்பு(ஆர்.பி.ஏ / டிரோன்கள்) செயல்படுவதற்கான தேவைகளை வெளியிட்டது.

பயங்கரவாதிகள் மற்றும் சட்டவிரோத சக்திகளால் இயக்கப்படும்சட்ட விரோதமான அல்லது மோசமான டிரோன்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, உள்துறைஅமைச்சகம், கடந்த மே 10-ம்தேதி, டிரோன்கள் மற்றும் பிறதுணை விமானங்களின் அச்சுறுத்தலைக் கையாள விரிவான நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) வெளியிட்டது.

இந்த எஸ்ஓபிக்கள் பாதுகாப்பு படைகளுக்கும், நாட்டின் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கும், மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், சட்ட விரோத அல்லதுமோசமான டிரோன்களுக்கு எதிராகஅனைவரும் விழிப்புடன் இருக்கி றார்கள்.

இந்த விவகாரம் சம்பந்தமாக துறை அதிகாரிகளால் தொடர்ந்துமதிப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும், தோல்வியுற்ற பாதுகாப் பிற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்