ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க பள்ளி மாணவர்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வேலூர் ஆற்காடு ஸ்ரீமகாலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நவ.16, 17-ல் நடைபெற்றது.

இதில், பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இம்மாநாட்டில் சீனியர் பிரிவில் அப்பள்ளியின் மாணவர்கள் ஆர்.நிர்மல்ராஜ், எஸ்.முத்தழகு ஆகியோர் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்கும்குப்பையில் இருந்து பயோ- எத்தனால்எரிபொருள் தயாரிக்கும் முறை குறித்து கட்டுரை சமர்ப்பித்தனர். இது மாநில அளவில் சீனியர் பிரிவில்சிறந்த கட்டுரையாக தேர்வானது.

இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் டிசம்பரில் நடைபெறும் தேசியஅறிவியல் மாநாட்டில் இம்மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கிறார்கள்.

அவர்களை ரோவர் கல்விக்குழும துணைத் தலைவர் ஜான் அசோக்வரதராஜன், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், உதவி தலைமை ஆசிரியை தமயந்தி, அறிவியல் ஆசிரியர் ராஜா ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்