செய்திகள் சில வரிகளில்: உத்தரகண்டில் யோகா முகாம் - முஸ்லீம்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கன்வா ஆசிரமம் சார்பில் 5 நாட்கள் நடக்கும் யோகா முகாமை நாளை அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து ஆசிரமத்தின் குரு விஸ்வ ஜெயந்த் யோகிராஜ் கூறுகையில், “யோகா என்பது எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது.

யோகா முகாமில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் அதிகமான முஸ்லீம் ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ளவுள்ளனர். யோகா பயிற்சியின் மூலம், மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.

மகாத்மா காந்தியின் ‘யங் இந்தியா’ தபால் உறை வெளியீடு

கொல்கத்தா

மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தில் தனது கொள்கையான அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தை பரப்பும் விதமாக, 1919 முதல் 1931-ம் ஆண்டு வரை ‘யங் இந்தியா’ என்ற வார இதழை நடத்தினார்.

காந்தியின் 150-வது பிறந்த நாளை போற்றும் விதமாக, ‘யங் இந்தியா’ சிறப்பு அஞ்சல் உறையை இந்திய அஞ்சல்துறை, கொல்கத்தாவில் நடக்கும் அஞ்சல் முத்திரை கண்காட்
சியில் வெளியிட்டது.

இந்த கண்காட்சி நவம்பர் 16 முதல் 21 வரை நடக்கிறது. இதில் குழந்தைகளுக்கான அஞ்சல் பெட்டி ஓவியப் போட்டியும், விழிப்புணர்வும் நடத்தப்படுகிறது.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்