நீண்ட நாள் கெடாத ‘ரசகுல்லா’ மேற்கு வங்கம் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

ரசகுல்லா என்றாலே இனிப்பு பிரியர்களின் நாக்கில் எச்சில் ஊறதொடங்கிவிடும். மிகவும் சுவையான ‘பங்கர் ரசகுல்லா’ வுக்கு புவிசார் குறியீட்டை கொல்கத்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக பெற்றது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும் ரசகுல்லாவை தயாரிக்க ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் உணவு தொழிநுட்பத் துறை ஆய்வு செய்தது.

இந்நிலையில், நீண்ட நாட்கள்கெட்டுபோகாத ரசகுல்லாவைபல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வகை ரசகுல்லா இயந்திரம் மூலம் உருவாக்கப்படவுள்ளது. இதை உருவாக்கி, சந்தையில் விற்பனை செய்ய மேற்கு வங்க அரசும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறை களின்படி ரசகுல்லா ஆலைகளை பல்கலைக் கழகம் அமைக்கும்.

இந்த வகை ரசகுல்லாக்கள் ‘மதர் டைரி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படவுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடும் வகையில் ‘நீரிழிவு ரசகுல்லா’வும் தயாரிக்கப்படவுள்ளது.

-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

10 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்