'குறை மாணவர்களிடம் இல்லை; அரசிடம்தான்'- மம்தாவைச் சாடிய மேற்குவங்க ஆளுநர் 

By ஐஏஎன்எஸ்

'குறைபாடு மாணவர்களிடத்திலோ ஆசிரியர்களிடமோ இல்லை; அரசிடம்தான்' என்று மேற்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜியை ஆளுநர் சாடியுள்ளார்.

முர்ஷிதாபாத், ஃபராக்கா பகுதியில் உள்ள எஸ்.என்.எச். கல்லூரியில் நேற்று வெள்ளி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மேற்குவங்க ஆளுநர் தங்கார் கலந்துகொண்டார். கல்லூரிக்குச் செல்ல, அரசிடம்ஹெலிகாப்டரைக் கோரி இருந்ததாகவும் அரசு மறுத்ததால் 300 கி.மீ. தூரம் சாலையில் காரில் பயணிக்க நேர்ந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கல்லூரி விழாவில் பேசிய ஆளுநர் தங்கார், ''மாணவர்களிடத்தில் எந்தக் குறையும் இல்லை. ஆசிரியர்களிடமும் இல்லை. நிர்வாகத்திடம் கூட எந்தக் குறைபாடும் இல்லை. குறை இருந்தால் அது அரசிடம்தான் உள்ளது.

ஏராளமான பல்கலைக்கழகங்களுக்கு நான் வேந்தராக இருப்பதில் ஒன்றை உணர்ந்திருக்கிறேன். அது, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு அரசு அழுத்தத்தைக் கொடுக்கிறது. பல்கலைக்கழகங்களைக் கோயில்களைப் போலப் பார்க்க வேண்டும் என்று துணை வேந்தர்களிடம் தெரிவித்துள்ளேன்'' என்று தங்கார் மாணவர்களிடையே பேசினார்.

எனினும் கல்லூரி விழாவை திரிணமூல் காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது.

இதுகுறித்துப் பேசிய மாவட்ட திரிணமூல் தலைவர் செளமிக் உசேன், ''ஆளுநர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அதனால் விழாவுக்குப் போகாததே நல்லது என்று நினைத்தோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

58 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்