ஹேக்கர்களால் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் இந்திய கல்வி நிறுவனங்கள்!

By ஐஏஎன்எஸ்

இந்தியாவில் கல்வித் துறை, அதிக சைபர் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி பாதுகாப்பு நிறுவனமான 'செக்ரைட்' ஜூலை முதல் செப்டம்பர் 2019 வரை இந்தியத் துறைகளில் ஆய்வை நடத்தியது.

அதன் ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:

* 30 சதவீதத்துக்கும் அதிகமான சைபர் அச்சுறுத்தல்கள், கல்வித் துறைகளுக்கு வருகின்றன.

* உற்பத்தித்துறை, வங்கி, நிதித் துறை மற்றும் காப்பீட்டுத் துறை, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளிலும் ஹேக்கர்கள் அதிக அளவில் ஊடுருவுகின்றனர். * நாட்டில் உள்ள எந்த ஒரு துறையும் சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் வலிமையோடு இல்லை.

* ரேன்சம்வேர், மால்வேர், வைரஸ், க்ரிப்டோஜேக்கிங் உள்ளிட்ட முறைகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

* கடந்த காலாண்டுகளைக் காட்டிலும் இம்முறை சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* இதைக் கருத்தில் கொண்டு இந்திய நிறுவனங்களும் அரசு அமைப்புகளும் பாதுகாப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

* 'ஆன்ட்டிவைரஸ்' உள்ளிட்ட உரிய பாதுகாப்பு அம்சங்கள் ஆடம்பரமானவை அல்ல; அத்தியாவசியத் தேவை.

* சைபர் தாக்குதல்களில் ட்ரோஜான்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் மீதான ஒட்டுமொத்த அச்சுறுத்தல்களில் 27% ட்ரோஜான்களின் பங்கு ஆகும்.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்