ஜேஎன்யூ மாணவர் போராட்டம்: விடுதிக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற்ற நிர்வாகம்

By செய்திப்பிரிவு

ஜேஎன்யூ மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, விடுதிக் கட்டண உயர்வு அறிவிப்பை பல்கலை. நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது. கடந்த 15 நாட்களாக மாணவர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிக் கட்டண உயர்வு, தடை செய்யப்படும் நேரம், இடம் குறித்து புதிய விதிமுறைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவுப் பட்டியலுக்கு எதிராக மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துப் பேசிய ஜேஎன்யூ மாணவர்கள் சங்கத் தலைவர் ஆயிஷீ சிங், ''எங்களை அழைத்துப் பேசாமலேயே விடுதி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. எங்களின் கடிதங்களுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. விடுதிக் கட்டணம் கணிசமாக சுமார் 400% அதிகரிக்கப்பட்டுள்ளது. உடைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நூலகம் சீக்கிரத்திலேயே மூடப்படுகிறது.

ஜேஎன்யூ வரலாற்றில் முதல்முறையாக உணவகத்துக்கு கட்டணம் செலுத்தாவிடில், நாங்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவோம். இட ஒதுக்கீட்டு முறை இந்த வரைவு அறிக்கையில் இல்லை'' என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கிடையே ஜேஎன்யூவின் 3-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ம் தேதி ஏஐசிடிஇ அரங்கத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது விடுதிக் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய கல்வித்துறை செயலர் ஆர்.சுப்ரமணியம், ''விடுதிக் கட்டணம் மற்றும் பிற வரைவுகளுக்கான அறிவிப்பை, நிர்வாகக் குழு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு உதவ சிறப்புத் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது. அதனால் மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்புங்கள். இதுவே சரியான நேரம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

17 mins ago

க்ரைம்

23 mins ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்