கல்வியே எதிர்காலம் என மாணவர்களுக்கு உணர்த்துங்கள்: ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை

By செய்திப்பிரிவு

கல்வியே எதிர்காலம் என்று மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இரா.ரமேஷ் அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டம்திருப்பூர் கல்வி மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் காலாண்டுத்தேர்வு முடிவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் தலைமை வகித்து பேசியதாவது:காலாண்டுத் தேர்வு முடிவுகளைக் கொண்டு ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அதேபோல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, மேலும் திறம்பட தேர்வு எழுத வைப்பதும் அவசியமான ஒன்றாகும். இவை இரண்டும் நம் முன்னே இருக்கும் சவால்கள். மாணவர்களிடம் எதிர்மறையான எண்ணங்களை சொல்லாமல், நேர்மறையான எண்ணங்களை சொல்லிச்சொல்லி பாடம் படிக்க வைக்க வேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது எதிர்காலம் கல்வி என்பதை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அன்பால் உணர்த்த வேண்டும். பக்கபலமாக இருங்கள்கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம்வகுப்பில் மாநில அளவில் தேர்ச்சிவிகிதத்தில் முதலிடம் பிடித்ததைப்போல், வரும் ஆண்டில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ரமேஷ் கூறினார்.

இதேபோல் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி வட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலை மற்றும் மதியம் என இரு பிரிவுகளாக ஆய்வுக்கூட்டம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

38 mins ago

ஓடிடி களம்

40 mins ago

விளையாட்டு

55 mins ago

சினிமா

57 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்