தேசிய தடகளப் போட்டியில் சாதனை: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற கோவை மாணவி

By செய்திப்பிரிவு

கோவை

தேசிய அளவிலான ஜூனியர் தடகளப்போட்டி, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர், வீராங் கனைகள் விளையாடினர். தமிழ கத்தில் இருந்து 145 பேர் பங்கேற்றனர்.

கோவையில் இருந்து கலந்து கொண்ட மாணவி நிவேதிதா (13), நீளம் தாண்டுதல் போட்டியில் 5.33 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம் மணியம்மாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.

நிவேதிதா கூறும்போது, “செல்வ புரம் பகுதியில் பெற்றோர் ஏ.ஞானஸ்கந்தன்-ஜி.சர்மிளா ஆகியோருடன் வசித்து வருகிறேன். தந்தை மில் தொழிலாளி. சிறு வயது முதலே விளையாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது.

எங்கள் ஊரில் நடைபெற்ற பண்டிகை மற்றும் திருவிழாக்களில் நடைபெறும் போட்டிகளில் பரிசு வென்றேன்.

2017-ம் ஆண்டு கோவை அத்லடிக் கிளப்பில் சேர்ந்து, நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறத் தொடங்கினேன். அந்த ஆண்டு நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில், நீளம் தாண்டுதலில் மூன்றாமிடம் பெற்றேன்.

2018-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றேன். நடப்பாண்டு நடைபெற்ற தமிழ்நாடு ஜூனியர் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் முதலிடமும், டிரையாத்லான் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றேன்.

கடந்த வாரம் குண்டூரில் நடை பெற்ற தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென் றேன். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன்” என்றார்.

தேசிய தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இம் மாணவியை பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா, உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கோவை அத்லடிக் கிளப் பயிற்சியாளர்கள் சீனிவாசன், விஷ்ணு உள்ளிட்டோர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்