மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு கல்வி: மத்திய அரசின் உயர் அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

மாணவர்களை திறன் மேம்பாட்டு கல்வியில் ஈடுபடுத்த அரசு பல முயற்சிகளை செய்து வருவதாக மத்திய திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

சிறந்த தொழில்முனைவோருக்கான தேசிய தொழில்முனைவோர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய தொழில்முனைவோர் விருது வழங்கும் விழா டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்தியதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத்துறை அமைச்சர் மகேந்திரா நாத் பாண்டே கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “ தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான மத்திய அரசு நிறுவனங்கள் கிராமப் புறங்களில் பணியாற்றினால்தான் அதிகளவிலான சிறு தொழில்முனைவோர்களை நம்மால் உருவாக்க முடியும்” என்றார்.

முன்னதாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் கே.பி.கிருஷ்ணன் பேசுகையில், “மாணவர்களை திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வியை ஈடுபடுத்த பல முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. திறன் மேம்பாட்டு கல்வி மற்றும்தொழிற்கல்வி மூலம் சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோராக முடியும். மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்காமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்முனைவோராக உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 mins ago

விளையாட்டு

57 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்