அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு மையம் ரத்து: அரசு தேர்வுத் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களை ரத்து செய்யுமாறு அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்
தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத்தேர்வில், பிளஸ் 1-ல் மட்டும்தேர்ச்சி மதிப்பெண் பெற்றால்போதும். மற்ற வகுப்புகளுக்
கான தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, உயர்கல்விக்கு செல்ல முடியும். நடப்பு கல்வி ஆண்டில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வித்துறையும், அரசு தேர்வுத்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தயாரிப்பு, தேர்வுக்கான மாணவர் விபரங்கள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன. இதைத்தொடர்ந்து, பிளஸ் 2-வுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

மாணவர்களின் விவரங்கள்

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் ராமசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க உள்ள, அனைத்துபள்ளிகளின் மாணவர்களையும், சரியாக கணக்கிட்டு, அதன்படி தேர்வு மையத்தை நிர்ணயிக்க வேண்டும். தேர்வு மையம் ஒதுக்க வேண்டிய பள்ளிகளின் பெயர், அங்கீகார விபரங்கள், உள் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை, முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே, தேர்வு மையங்களாக செயல்பட்ட பள்ளிகளின் விவரங்கள், ஆய்வு செய்யப்பட வேண்டும். புதிதாக தேர்வு மையங்கள் கேட்டுள்ள பள்ளிகளின் விவரங்கள், தனியாக இணைக்கப்பட வேண்டும்.

தேர்வு மையம் ரத்து

தேர்வு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள், அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றனவா என்பதைஉறுதி செய்ய வேண்டும்.
அங்கீகாரம் பெறாத பள்ளிகள், தேர்வு மையமாக செயல்பட முடியாது. இதில் விதிமீறலோ, தவறுகளோ ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட முதன்மைகல்வி அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்