டெல்லியில் மைக்ரோசாப்ட் நடத்தும் கல்வி மேளா-19 நிகழ்ச்சிக்கு ஆம்பூர் ஆசிரியருக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

ஆம்பூர்

டெல்லியில் நவம்பர் 19, 20-ம்தேதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தும் ‘கல்வி மேளா-19 என்றநிகழ்ச்சியில் பங்கேற்க ஆம்பூர் அரசுபள்ளி ஆசிரியர் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 8 ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பாடப்பயிற்சியை நடத்தி வருகிறது. இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டுக்கான கல்வி மேளா நிகழ்ச்சியை டெல்லி அருகே உள்ள குர்கானில் நவம்பர் 19, 20-ல் நடத்துகிறது. ‘புதுமைக் கற்றலில் மைக்ரோசாப்ட்டின் பங்கு’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தேசிய அளவில் நடைபெறும் கல்விக் கருத்தரங்க நிகழ்ச்சியில் கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு புதுமைகள் படைத்து வரும் 116 ஆசிரியர்களிடம் இருந்து கற்றல் மற்றும் செயல்திட்ட ஆய்வுகள் பல்வேறு தலைப்புகளில் சமர்பிக்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது செலவில் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச்சென்று அங்கு சொகுசு தங்கும் விடுதியில் தங்க வைத்து சிறப்பிக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லகேம் அரசு நடுநிலை பள்ளிஆசிரியர் சரவணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்