ஜம்மு- காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவிக்க காங்கிரஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்து,ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

இதனையடுத்து, அம்மாநில முன்னாள் முதல்வர்கள் பாரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இணைய சேவை, தகவல் தொடர்பு சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் அதிகாரப்பூர்வமாக யூனியன் பிரதேசங்களாக அக்டோபர் 31-ம் தேதி செயல்பட்டு வருகிறது. அதேபோல், செல்போன் சேவை கொடுக்கப்பட்டது. பள்ளிகளுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், வீட்டு காவல் மற்றும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரக்கணக்கான மக்கள் 90 நாட்களை கடந்து இன்னும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் மாநிலத்திற்கு வெளியே உள்ள சிறைகளில் உள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட அரசியல் கைதிகளை விடுதலை செய்து, நிலைமையை சரிசெய்யவும், ஜனநாயக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்