அழகான நாடாளுமன்ற கட்டிடத்தை  கைவிடுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி:

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்காக, அழகும் தனித்துவமும் நிறைந்த தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தை கைவிட்டுவிடாதீர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கரண் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றம் டெல்லியில் உள்ள சன்சத் பவனில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் 1927-ம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு கரண் சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவா் கூறியிருப்பதாவது:

தற்போதைய வட்ட வடிவிலான நாடாளுமன்ற கட்டிடம், அழகும் தனித்துவமும் நிறைந்தது. புதிய நாடாளுமன்ற கட்டி
டம் கட்டுவதற்காக, தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தை எந்தவிதத்திலும் கைவிட்டுவிடக் கூடாது. புதிய இடத்துக்கு
நாடாளுமன்றம் மாறும்போது, இந்த கட்டிடத்தின் முக்கியத்துவம் குறைந்து விடும். எனவே, புதிய கட்டிடம் கட்டுவதற்குப் பதிலாக, தற்போதைய கட்டிடத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். நாடாளுமன்றத்தில் கூடுதல் உறுப்பினர்கள் அமரும் வகையில், மாநிலங்களவையாக செயல்படும் மைய மண்டபத்தை மக்களவையாகவும், மக்களவையாக செயல்படும் அரங்கை மாநிலங்களவையாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு கரண் சிங் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்