வகுப்பில் இடமில்லை: புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்!

By செய்திப்பிரிவு

பாட்னா

வகுப்பில் இடமில்லாததால், கல்லூரி புல்வெளியில் அமர்ந்து பிஹார் மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

பிஹாரின் பேட்டியா பகுதியில் ராம் லகான் சிங் யாதவ் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, கல்லூரி மாணவர்கள் ஜி.எஸ். தேர்வெழுத வந்துள்ளனர். ஆனால் போதிய தேர்வு மையங்கள் இல்லாததால், அனைவரும் வகுப்புக்கு வெளியே இருந்த புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது சிறு குழுவாகப் பிரிந்து அமர்ந்து மாணவர்கள் தேர்வெழுதினர். அப்போது அவர்கள் 'காப்பி' அடித்ததையும் காண முடிந்தது.

இதுகுறித்து ராம் லகான் சிங் யாதவ் கல்லூரியின் தேர்வுகள் கண்காணிப்பாளர் ராஜேஸ்வர் கூறும்போது, ''எங்கள் கல்லூரியில் 2 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் வகுப்புகள் உள்ளன. ஆனால் அன்று மட்டுமே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுத வந்துவிட்டனர். அதிக மாணவர்களால்தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது.

அதிக அளவிலான மாணவர்கள் அமரும் வகையில் பெரிய தேர்வு மையம் கட்டப்பட்டால்தான் இந்தப் பிரச்சினை தீரும். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் பேசிவிட்டோம். ஆனால் இன்னும் தேர்வு மையம் கட்டப்படவில்லை.

முறையான தேர்வு மையம் இல்லாதது மாணவர்கள் தேர்வெழுத சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல மோசமான கையெழுத்தின் காரணமாக, மாணவர்களின் தேர்வு முடிவுகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது'' என்று தெரிவித்தார்.

ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

59 mins ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்