கலங்கவைத்த ஃபேஸ்புக் பதிவு: அமெரிக்க பள்ளிக்கு ஓராண்டு உணவு அளித்த நடிகை ஜெனிஃபர் லோபஸ் 

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்

ஃபேஸ்புக் பதிவொன்றைப் படித்த பிரபல நடிகை ஜெனிஃபர் லோபஸ், அமெரிக்கத் தொடக்கப் பள்ளிக்கு ஓராண்டு உணவு அளித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜேக்ஸ்போரோ தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ப்ரூக்கி காய்ன்ஸ். அவர் பசியால் வாடிய தனது மாணவன் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அப்பதிவு, இணையத்தில் வைரல் ஆனது.

அந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகையும் தொழிலதிபருமான ஜெனிஃபர் லோபஸ் தனது காதலருடன் இணைந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஓராண்டுக்கு ஆகும் உணவுக்கான தொகையை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ''அந்தப் பதிவு என் கண்களில் மட்டுமில்லை, அலெக்ஸின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. அதனால் ஜேக்ஸ்போரோ தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்குத் தேவைப்படும் உணவுக்கான தொகையை அளித்திருக்கிறோம்'' என்றார்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஆசிரியர் ப்ரூக்கி காய்ன்ஸ் என்பவர், தனது மாணவனைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதில், ''சிறுவனின் நிலை கேட்டு 20 பேரின் முன்னால் அழுதேன். எந்த ஒரு குழந்தையும் எப்போதும் பசியுடன் இருக்கக் கூடாது'' என்று கூறியிருந்தார். அந்தப் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்