ராணுவ விளையாட்டு போட்டி: ஆனந்தன் குணசேகரனுக்கு 3-வது தங்கப் பதக்கம்

By செய்திப்பிரிவு

வூஹான்

சீனாவில் உள்ள வூஹான் நகரில் உலக ராணுவ விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2 தினங்களுக்கு முன் நடந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், ஆனந்தன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் பந்தய தூரத்தை 24.31 விநாடிகளில் கடந்து ஆனந்தன் குணசேகரன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். கொலம்பிய வீரரான பர்டோ டோடிசெலோ வெள்ளிப் பதக்கத்தையும், காஸா ஜோஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஈட்டி எறியும் பிரிவில், இந்தியாவுக்கு மற்றொரு தங்கப் பதக்கம் கிடைத்தது. வாரணாசியைச் சேர்ந்த இந்திய வீரரான ஷிவ்பால், 83.33 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இப்பிரிவில் போலந்து வீரரான குருகோவ்ஸ்கி மார்சின் வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையின் ரணசிங்கே வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்