மாற்றத்துக்கான கருவி: சட்டக்கல்வி ஹார்வர்டு பேராசிரியர் கருத்து

By செய்திப்பிரிவு

மாற்றத்துக் கான ஒரு கருவியாக சட்டம் திகழ்கிறது என்று ஹார்வர்டு பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

ஹரியாணா மாநிலத் தில் உள்ள ஓ.பி.ஜிண் டால் என்ற தனியார் பல்கலைக்கழகத்தில் ‘சட்டத்தின் வாயிலாக உலகை மாற்றுதல்’ என்ற தலைப்பில் சர்வதேச கருந்தரங்கு நடந்தது.

அதில் சிறப்பு விருந்தினராக ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் சுகாதாரம் மற்றும் மனித உரிமைத் துறையின் பேராசிரியர் ஸ்டீபன் பி மார்க் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சட்டக் கல்வி உதவுகிறது. சட்டத்தை படித்தால், பணம் உள்ளவர்கள் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும் உதவும். நிறைய பணம் சம்பாதிக்க உங்களைத் தயார்படுத்தும். ஆனால், அதன் முக்கிய பங்கானது, சிக்கலைத் தீர்க்கும் நபராகவும், பிற்காலத்தில் நேர்மறையான மாற்றத்துக்கான முகவராகவும் இருக்க உங்களைத் தயார்படுத்தும். காலநிலை மாற்றம் போன்ற புதிய சவால்களை கையாளவும் பயன்படும். மாற்றத்துக்கான ஒரு கருவியாக சட்டம் திகழ்கிறது.

சட்டத்தால் அடக்குமுறையைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். அதை எதிர்த்து, கீழ்ப்படியாமல் இருக்க கற்றுக்கொள்ளவும் முடியும். இதைதான் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இவ்வாறு பேராசிரியர் ஸ்டீபன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்