மனித உணர்ச்சிகளை அறியும் செயற்கை தோல் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

லண்டன்:

பொதுவாகவே குளர்ச்சி, வெப்பம் ஆகியவற்றை நமது தோல்தான் முதலில் உணரும். பின்னர் அதை நரம்பு வழியாக மூளைக்கு கொண்டு சென்று அதற்கு ஏற்றவாறு எதிர்வினையை நமது உடல் செய்யும்.

அதேபோல், கிள்ளுதல், தொடுதல், கூச்சம் போன்ற உணர்வுகளை மனித மூளை தோல் மூலமே கண்டறியும். இந்நிலையில், மனித உணர்வுகளை கண்டறியும் செயற்கை தோலை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்காம் பாரிஸ்டெக் நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செயற்கை தோலை செல்போனில் இணைத்துக் கொண்டு, அதை அழுத்தி பிடிக்கும்போது, கோபம் என்ற உணர்ச்சியை அது வெளிப்படுத்தும். மெதுவாக வருடினால், கூச்சம் என்ற உணர்வை வெளிப்படுத்தும். இந்த செயற்கை தோல், சிலிக்கான் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித தோல் மாற்று அறுவை சிகிச்சைதான் எங்கள் இலக்கு என்று செயற்கை தோலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

43 mins ago

விளையாட்டு

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்