பெண்கள் பள்ளியில் அதிக ஆசிரியைகள்: ராஜஸ்தான் திட்டம்

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான்

பெண்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று பேசிய கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங், ''பெண்கள் பள்ளிகளில் அதிக அளவிலான ஆசிரியைகளை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அங்கு படிக்கும் மாணவிகள், தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தாயிடமோ, சகோதரிடயிடமோ சொல்வதுபோல ஆசிரியரிடமும் பகிர்ந்துகொள்ள முடியும்.

அதேபோல பெண்கள் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்குட்பட்ட ஆண் ஆசிரியர்கள் அனைவரையும் திரும்ப அழைத்துக்கொள்ளவும் அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் அர்த்தம் பெண்கள் பள்ளிகளில், ஆண்கள் கற்பிக்கக்கூடாது என்பதோ, 50 வயதுக்கு உட்பட்ட ஆண் ஆசிரியர்கள் வேலை செய்யக்கூடாது என்பதோ அல்ல.

நமது மகள்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை நோக்கியே அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது, பெண் ஆசிரியர்களுடன்தான் எளிதாக அதைப் பகிர முடியும்.

ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளின்படியே, பெண் ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்தபிறகு அதிக அளவிலான ஆசிரியைகள் பெண்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.

ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்