ஜேஇஇ தேர்வு: திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை

ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற் கொள்ள நாளை (அக்.20) கடைசி நாள் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.

இதில் முதல்நிலை தேர்வானது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் இருமுறை நடத்தப்படும்.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு ஜனவரி 6 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த செப். 3-ல் தொடங்கி அக். 10-ம் தேதியுடன் முடிந்தது. சுமார் 10.2 லட்ச பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் பதிவு செய்துள்ள விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்வதற்கான கால அவகாசம் நாளை (அக்.20) முடிவடைகிறது. http://nta.ac.in என்ற இணையதளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஹால்டிக்கெட்கள் டிச. 6 அன்றும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்