புத்திக்கூர்மையில் மனிதர்களை விஞ்சுகின்றன குரங்குகள்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்

"ஒரு வேலையை முழுசா செய்ய மாட்டியே.... அங்கும் இங்கும் தாவிக்கிட்டே இருக்கிற... சரியான குரங்கு புத்தி” என்று திட்டு வாங்கி இருக்கிறீர்களா வாலுத்தனமான மாணவர்களே!

“ஆமாம்! ஆமாம்!” என்கிறீர்களா, அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.

சிக்கலுக்குத் தீர்வு காணும் திறனில் மனிதர்களை விடவும் குரங்குகள் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக புதிய ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. எதிர்பாராத பிரச்சினையை எதிர்கொள்ளும் போது திணறிப்போவது மனிதர்களுக்கு இயல்பு. ஆனால், குரங்குகளோ கூடுமானவரை புதிய வழிகளை கண்டறிந்து தாங்கள் எதிர்கொள்ள நேரிடும் சவால்களுக்கு சூட்சுமமாகத் தீர்வு காண்பதாக ‘சைண்டிஃபிக் ரிபோர்ட்ஸ்’ ஆய்விதழ் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

முன் தீர்மானங்களால் மனிதர்கள்முடிவெடுக்கும் திறனில் சொதப்புவதாகவும் அதனால் வாய்ப்புகளை தவறவிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு யோசனையில் இருந்து மற்றொரு யோசனைக்கு தாவுதல், நெகிழ்வான புத்திக்கூர்மை எனப்படுகிறது. இந்த ஆற்றலை, காப்புசின் மற்றும் ரீசஸ் மக்காஸ் ஆகிய இரண்டு வகையான குரங்கள் அபாரமாக பெற்றிருக்கின்றன. முன்முடிவுகள் இல்லாமல் துரிதமாக புதிய சவால்களை திறம்பட இவைகளால் எதிர்கொள்ள முடிகிறது.

பரிணாம வளர்ச்சியில் முன்னேறியகுரங்குகளான சிம்பன்சி, பபூன்கள் ஆகியவையும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் மனிதர்களை விடவும் புத்திசாலிகளாகத்தான் செயல்படுவதாக ஆய்வு முடிவு காட்டுகிறது. எத்தனை முறை தோற்றாலும் ஒரே அணுகுமுறையை பின்பற்றும் குறைபாடு மனிதர்களிடம் காணப்படுவதாகவும் இதற்கு நேர்மாறாக புதுவிதமான சோதனை முயற்சிகளில் இறங்கும் ஆற்றல் குரங்குகளிடம் வெளிப்படுவதாகவும் தெரிகிறது.

மனிதர்கள், குரங்குகள் இருவரை யும் வைத்து Trial and Error என்றழைக்கப்படும் முயற்சி மற்றும் பிழை என்ற சோதனை நடத்தப்பட்டது. சதுரத்தை முக்கோணமாக மாற்ற வேண்டும் என்பதுதான் சவால். இலக்கை அடைந்ததும் பரிசு தரப்பட்டது.
மனிதர்கள் விளையாடியபோது அவர்கள் வெற்றி அடையும்போதெல்லாம் உற்சாகமான பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன அல்லது சில மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. குரங்குகளுக்கோ வாழைப் பழங்கள் தரப்பட்டன. பதிலை தவறவிட்டபோது இருவருக்கும் நேரம் முடிந்ததாக மற்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த சோதனையில் பங்கேற்ற அனைத்து குரங்குகளும் ஒரு முயற்சி தவறும்போது மாற்று வழிகளில் உடனடியாக விடை கண்டுபிடித்தன. ஆனால், இதில் பங்கேற்ற மனிதர்களில் 61 சதவீதத்தினர் செய்த தவறை மீண்டும் இழைத்தனர்.

56 மனிதர்கள், 22 காப்புசின் குரங்குகள் மற்றும் 7 ரீசஸ் மக்காஸ் ஆகியோரைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.
“அன்றாடம் ஒரே பாதையில் பயணம் செய்து அலுவலகத்துக்குச் செல்வதுபோல ஏற்கெனவே தெரிந்தவழிமுறைகளை மட்டுமே மனிதர்கள்பயன்படுத்த பழக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ஒருதலைபட்சமான, காலாவதியான பழக்கவழக்கங்களையும் அவர்கள் கைவிடத் தயாராக இல்லை என்பதை இந்த சோதனை காட்டுகிறது” என்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள்.

இதுவரை எதற்காகக் குரங்கை கேலிசெய்தோமோ அதுதான் குரங்கிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் போல!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்