மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடப்பு கல்வி ஆண்டில் திருவள்ளூர் மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 16-ம் தேதி திருவள்ளூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 9 மணியளவில் நடைபெற உள்ளன.

இதில், தடகளம், நீச்சல், டென்னிஸ், ஹாக்கி ஆகிய போட்டிகள் இடம்பெறும். அம்பத்தூர் அருகே உள்ள முகப்பேர் மினி விளையாட்டரங்கில் (டால்பின் நீச்சல்குளம் அகாடமி) 16-ம் தேதி காலை 9 மணியளவில் டென்னிஸ் போட்டி நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 14 வயதுக்குட்பட்டவர் களாக இருக்க வேண்டும். மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும், 12-ம் வகுப்பு மாணவர்கள், மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து வயது மற்றும் படிப்புச் சான்றிதழ் பெற்று போட்டி நடைபெறும் 16-ம் தேதி காலை 8 மணியளவில் நுழைவு படிவத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்